சென்னை: கர்நாடக மாநிலம் மங்களூருவிலுள்ள மங்களூர் ரிஃபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் (எம்ஆர்பிஎல்) பொது மேலாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு நவம்பர் 27-ம் தேதிக்குள் விண்ணப்பக்கவேண்டும். இதுதொடர்பான அறிவிப்பு எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் வெளிவந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பொது மேலாளர் பணியிடங்கள் 2-ம், துணைப் பொது மேலாளர் பணியிடம் ஒன்றும் காலியாக உள்ளது.

பொது மேலாளர் பணியிடத்துக்கு CA/ICWA/MBA படித்திருக்கவேண்டும். மேலும் குறைந்தது 21 வருடங்கள் கார்ப்பரேட் அல்லது உற்பத்தித்துறையில் பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும்.
பொது மேலாளர் பணியிடத்துக்கு 49 வயதுக்குக் குறையாமல் இருக்கவேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ல நபர்கள் விண்ணப்பங்களை Sr. Manager (HR Recruitment), Mangalore Refinery and Petrochemicals Ltd., Post Kuthethur, Mangalore - 575030 என்ற முகவரிக்கு நவம்பர் 27-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
ஓஎன்ஜிசி-யின் துணை நிறுவனமான எம்ஆர்பிஎல் 1988-ல் தொடங்கப்பட்டதாகும்.


Click it and Unblock the Notifications

