நீங்கள் லேப்-டெக்னீஷியனா...? எம்ஆர்பி-க்கு உடனே அப்ளிகேஷன் போடுங்க...!!

Posted By:

சென்னை: லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ சேவை தேர்வாணையம் (எம்ஆர்பி) அறிவிப்பு செய்துள்ளது.

மொத்தம் 710 லேப்- டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக உள்ளதாம். தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

நீங்கள் லேப்-டெக்னீஷியனா...? எம்ஆர்பி-க்கு உடனே அப்ளிகேஷன் போடுங்க...!!

இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கண்டிப்பாக பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிப்பு படித்ததற்கான சான்ரிதவையும் வைத்திருக்கவேண்டும். மேலும் நல்ல உடல், கண் பார்வை, வெளியே சென்று வேலை செய்யத் தயாராக இருக்கவேண்டும்.

வயது 18 முதல் 57-க்குள் இருக்கலாம்.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் எம்ஆர்பி இணையதளத்தில் கிடைக்கின்றன. அணுக வேண்டிய இணையதள முகவரி: http://www.mrb.tn.gov.in

கல்வித் தகுதி, தொழில்நுட்ப கல்வித் தகுதி அடிப்படையில் ஆட்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

விண்ணப்பக் கட்டணமாக ஓபிசி, பொதுப் பிரிவினருக்கு ரூ.500-ம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250-ம் வசூலிக்கப்படும்.

English summary
Medical Services Recruitment Board (MRB) Tamil Nadu invited applications for 710 Lab Technician Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 01 February 2016. Notification details Notification No. : 1 / MRB / 2016 MRB Tamil Nadu Vacancy Details Total Number of Posts: 710 Name of the Posts: Lab Technician Grade III Eligibility Criteria Educational Qualification: Must have passed plus-two Examination. Must possess, Certificate in Medical Lab Technology Course (one year duration) undergone in any institution recognized by the Director of Medical Education; and Must have a good physique, good vision and capacity to do outdoor work.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia