பிராஸ்தெட்டிக் கிராஃப்ட்ஸ்மேன் பதவி: விண்ணப்பங்களை வரவேற்கிறது எம்ஆர்பி

Posted By:

சென்னை: பிராஸ்தெட்டிக் கிராஃப்ட்ஸ்மேன் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மருத்துவ சேவை தேர்வாணையம்(எம்ஆர்பி) வரவேற்றுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

பிராஸ்தெட்டிக் கிராஃப்ட்ஸ்மேன் பதவி: விண்ணப்பங்களை வரவேற்கிறது எம்ஆர்பி

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கண்டிப்பாக 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் பிராஸ்தெட்டிக்ஸ் மற்றும் ஆர்த்தொட்டிக்ஸ் பிரிவில் டிப்ளமோ படித்திருக்கவேண்டும்.

வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். படிப்பில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டே இந்த பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 10-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 வசூலிக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தைக் காணலாம்.

தமிழ்நாடு அரசால் மருத்துவ சேவை தேர்வாணையம் அமைக்கப்பட்டது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்து வருகிறது எம்ஆர்பி.


English summary
Medical Services Recruitment Board (MRB) Tamil Nadu invited applications for 64 Prosthetic Craftsman Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 10 February 2016. Notification details Notification No. : 4/MRB/2016 Vacancy Details Total Number of Posts: 64 Name of the Posts: Prosthetic Craftsman Eligibility Criteria Educational Qualification: Must have passed Higher Secondary Examination and Must have obtained two years diploma in Prosthetics and Orthotics awarded by the Directorate Technical Education or its equivalent Diploma from any other Institution recognised by the Government of Tamil Nadu.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia