மாணவர்களைச் சேர்க்க தாய்மொழி விவரங்கள் அவசியம்; சி.பி.எஸ்.இ. புதிய உத்தரவு

Posted By:

சென்னை: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும்போது அவர்களது சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்களையும் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பி்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அந்த விவரம் வருமாறு:

மாணவர்களைச் சேர்க்க தாய்மொழி விவரங்கள் அவசியம்; சி.பி.எஸ்.இ. புதிய உத்தரவு

சி.பி.எஸ்.இ. அமைப்பின் இணைப்பைப் பெற்றுள்ள அனைத்துப் பள்ளிகளும் மாணவர் சேர்க்கையின்போது தாய்மொழி குறித்த விவரங்களையும், மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மாணவர் கற்பிக்க விரும்பும் மொழிகளையும் சேர்க்கைப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

இதுதொடர்பான தேவையான அனைத்து மாற்றங்களையும் பள்ளி சேர்க்கைப் படிவங்களிலும், பதிவேடுகளிலும் மேற்கொள்ள வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில், ஆங்கிலம், ஹிந்தியுடன் ஏதாவது அரசியல் சாசன சட்டத்தில் நவீன இந்திய மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒன்றை மூன்றாவது மொழியாக குழந்தைகள் கற்கலாம்.

கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் அண்மையில் மூன்றாவது மொழியான ஜெர்மனி மொழிக்குப் பதிலாக சம்ஸ்கிருத மொழி கொண்டுவரப்பட்டது நினைவிருக்கலாம்.

English summary
Mother tongue details has to be given in the time of admission in CBSE Schools. CBSE Management has send a circular on this issue recently.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia