பள்ளி வளாகத்தில் அதிக அளவில் கொசுக்கள் இருந்த நிலையில் அப்பள்ளிக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த சீனபுரத்தில் ரிச்மன்ட் எனும் பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றுக் கணக்கான மாணவர்கள் இங்கே பயின்று வரும் நிலையில் கடந்த சில தினங்களாக இப்பள்ளி வளாகத்தில் அதிகளவிலான கொசுக்கள் பரவியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் சோதனை மேற்கொண்ட சுகாதாரத் துறையினர் பள்ளி வளாகத்தில் கழிவு நீர் அதிக அளவில் தேங்கி அவற்றில் கொசுக்கள் உருவானதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து, அதனைச் சுத்தம் செய்யவும், கொசுக்களால் மாணவர்களுக்கு நோய் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும் ஒரு வாரத்திற்கு அப்பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
English summary
Mosquito prevention in Schools : One week Leave
Story first published: Wednesday, November 14, 2018, 12:52 [IST]


Click it and Unblock the Notifications












