பி.இ சேர்ந்தவர்களில் 30 ஆயிரம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள்.. இன்னும் 1.30 லட்சம் சீட்கள் காலி!

சென்னை: பி.இ. படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களில் 30,405 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்று தெரியவந்துள்ளது. மேலும் பி.இ. பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் மட்டும் இதுவரை 63 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்திலுள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இதற்கென மையம் அமைக்கப்பட்டு ஜூன் 28-ம் தேதி முதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.

பி.இ சேர்ந்தவர்களில் 30 ஆயிரம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள்.. இன்னும் 1.30 லட்சம் சீட்கள் காலி!

பொதுப் பிரிவுக்கான கவுன்சிலிங் ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்க 86,453 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 63,556 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கான அட்மிஷன் கடிதத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

அதே நேரத்தில் கவுன்சிலிங் கடிதம் பெற்றும் 22,587 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவே இல்லை.

310 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.

அட்மிஷன் முடிந்தது போக தற்போது தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 560 பொறியியல் பாடப் பிரிவு இடங்கள் காலியாக உள்ளன.

அட்மிஷன் கடிதம் பெற்றவர்களில் 30,405 மாணவ, மாணவிகள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
More than 63000 students has got BE admission in Anna University which is conducting the counselling for engineering courses.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+