காலியாக கிடக்கும் 5,213 துணை மருத்துவப் படிப்புகள்!

Posted By:

சென்னை: பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்காக நடைபெற்று வரும் கவுன்சிலிங்கில் 5,213 இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பிஎஸ்சி நர்சிங், பிசியோதெரப்பி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏராளமான மாணவிகள் இதில் பங்கேற்று பயன்பெற்று வருகின்றனர். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நர்ஸிங் கல்லூரியில் சேர்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காலியாக கிடக்கும் 5,213 துணை மருத்துவப் படிப்புகள்!

பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம், உள்ளிட்ட 9 படிப்புகளுக்கான அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் கோலாகலமாக நடைபெறுகிறது. நேற்று வரை நடைபெற்ற கலந்தாய்வில் 608 இடங்கள் நிரம்பியுள்ளன.

அரசு கல்லூரிகளில் உள்ள 553 இடங்கள் மூன்று நாள்கள் கவுன்சிலிங்கில் நிரம்பிவிட்டன. நான்காம் நாள் கவுன்சிலிங்கில் மீதம் இருந்த 2 அரசு கல்லூரி இடங்களும் நிரம்பிவிட்டன.

இதைப் போலவே தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 606 இடங்கள் நிரம்பியுள்ளன. நேற்று மாலை கவுன்சிலிங்கின் முடிவில் மொத்தம் 608 இடங்கள் நிரம்பின. மீதம் 5,213 இடங்கள் காலியாகவே உள்ளன.

அரசுக் கல்லூரி இடங்கள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு வரும் 27-ஆம் தேதி வரை கவுன்சிலிங்கில் நடைபெறும் என்று தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் குறைவு என்பதால் அவை முன்னதாகவே நிரம்பிவிட்டன. மீதமுள்ள தனியார் கல்லூரி இடங்கள் ஆகஸ்ட் 27-க்குள் நிரம்பிவிடும் என்று தேர்வுக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English summary
More than 5000 Nursing seats available for Counselling, selection Committee said. All Government college seats has been selected by the students in first 3 days.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia