ஆன்-லைனில் கவுன்சிலிங்: 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு டிரான்ஸ்பர்!

சென்னை: ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கவுன்சிலிங் மூலம் தற்போது டிரான்ஸ்பர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறைக்கு ஆசிரியர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற ஆன்-லைன் கவுன்சிலிங்கில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது.

ஆன்-லைனில் கவுன்சிலிங்: 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு டிரான்ஸ்பர்!

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 249 பேர் அந்தந்த மாவட்டங்களுக்குள்ளும், 98 பேர் மாவட்டம் விட்டு மாவட்டமும் டிரான்ஸ்பர் பெற்றனர்.

சிறப்பாசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெற்ற கவுன்சிலிங்கில் ஓவிய ஆசிரியர்கள் 32 பேருக்கும், இசை ஆசிரியர்கள் 15 பேருக்கும், உடற்கல்வி ஆசிரியர்கள் 45 பேருக்கும், இடைநிலை ஆசிரியர்கள் 56 பேருக்கும், தையல் ஆசிரியர்கள் 9 பேருக்கும் டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங் நாளை(ஆகஸ்ட் 18) நடைபெறுகிறது. இதற்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் 1 முதல் 450 வரை இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற உள்ள கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
More than 500 teachers,head masters has got transfer through Online Counselling which was conducted by School Education Department
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X