தமிழகத்தில் பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகள் 37 ஆயிரம் பேராம்.. ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்!!

சென்னை: தமிழகத்தில் பள்ளி செல்லாமல் 37 ஆயிரம் குழந்தைகள் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் கல்வி ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒரு குழந்தை கூட கல்வி கற்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு கல்வித் திட்டங்கள், இலவசத் திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகள் 37 ஆயிரம் பேராம்.. ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்!!

இருந்தபோதும் பள்ளி செல்லாமல் இத்தனை ஆயிரம் குழந்தைகள் தமிழகத்தில் இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 37 ஆயிரம் பள்ளி செல்லாமல் குழந்தைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் மாவட்டங்களில்தான் பள்ளி செல்லாத குழந்தைகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக, சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள 2 மாவட்டங்களில் இத்தனை ஆயிரம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்குச் செல்லும் நிலை இருப்பது பலரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

அதேபோல மாநிலத்துக்குள்ளேயே இடம்பெயரும் தொழிலாளர்கள் காரணமாக விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

சென்னை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர், பெரும்பாலும் வட மாநிலங்களிலிருந்து இங்கு குடிபெயர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களுக்காக ஹிந்தி, ஒரியா உள்ளிட்ட மொழிகளில் பாடங்களை நடத்துவதற்கான ஆசிரியர்களும் தன்னார்வ அமைப்புகளின் மூலம் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதேபோல ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் ஏராளமான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அவர்களின் குழந்தைகளுக்காக தெலுங்கு மொழியிலும் பாடங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலிருந்து சேலம், ஈரோடு பகுதிக்கு இடம்பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்லாமல் உள்ளனர். இவர்கள் பருத்தி சீசனில் ஆண்டுக்கு 3 அல்லது 4 மாதங்கள் தங்களது குழந்தைகளுடன் சென்றுவிடுவதால், அவர்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லையாம். எனவே இந்தக் குழந்தைகளுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 1,250-ஆக உள்ளது. இந்தப் புள்ளி விவரத்தில் கட்டுமானப் பணிகள், சாலையோரங்களில் வசிப்பவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை.

இந்தக் குழந்தைகளில் 33 ஆயிரம் பேரை பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்துக் குழந்தைகளும் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படுவர் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
More than 37,000 children are not going to Schools in Tamilnadu, School education Department Officails told this. The department officials are taking serious action to bring back children to schools.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+