'காத்து வாங்கும்' என்ஜினீயரிங் கல்லூரிகள்.. இன்னும் 1.16 லட்சம் இடங்கள் காலி!!

சென்னை: என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்க்கை தொடங்கி 22 நாள்கள் கடந்த பின்னரும் எதிர்பார்த்த அளவுக்கு அந்தக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறவில்லை.

பெரும்பாலான கல்லூரிகள் காற்று வாங்குகின்றனர். சுமார் 1.16 லட்சம் இடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன.

அண்ணா பல்கலை

அண்ணா பல்கலை

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. ஒற்றைச் சாளர முறையில் இந்த சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

கவுன்சிலிங்

கவுன்சிலிங்

கடந்த மாதம் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பி.இ, பி.டெக் இடங்களில் சேர மாற்றுத் திறனாளி மாணவர்கள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது. ஜூலை 1-ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.

இடங்கள் காலி...

இடங்கள் காலி...

ஆனால் பொதுப் பிரிவு கவுன்சிலிங் தொடங்கி 22 நாள்கள் கடந்தும் இன்னும் 1 லட்சத்துக்கு 16 ஆயிரத்துக்கு 742 பிஇ இடங்கள் காலியாகவே உள்ளன. கலந்தாய்வில் பங்கேற்க நேற்று வரை மொத்தம் 1,07,005 பேர்

76,351 பேர் சேர்க்கை

76,351 பேர் சேர்க்கை

அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 76,351 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 30,259 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. 395 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.

முதல் தலைமுறை பட்டதாரிகள்

முதல் தலைமுறை பட்டதாரிகள்

இடங்களைத் தேர்வு செய்தவர்களில் 38,393 மாணவ, மாணவிகள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நிலவரப்படி மட்டும்1 லட்சத்து 16 ஆயிரத்து 742 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன. 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரு சீட் கூட நிரம்பவில்லை. பல கல்லூரிகள் காற்று வாங்குவதாகத் தெரியவந்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
More than 1 lakh BE seats has to be filled by Chennai Anna University which is conducting the counselling for engineering admissions. 70 Thousand students has get admissions in engineering colleges through single window clearance.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+