வெட்கக் கேடு... அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் இரண்டு மடங்கு மாணவர்கள்!

Posted By:

சென்னை: அரசு பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதைப் போலவே தமிழகத்தில் அரசு பள்ளிகள் அளவுக்கு தனியார் பள்ளிகளும் பெருகி, 'கல்வி வியாபாரம்' செழிப்பாக நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வெட்கக் கேடான நிலை இதுவாகும். அரசு இலவசமாக கல்வி வழங்குகிறது. படிக்கத் தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்கினாலும், நடுத்தர மக்கள், நடுத்தரத்துக்குக் கீழுள்ள பலரும்கூட கடன் பெற்றாவது தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் அவலம் அதிகரித்து வருகிறது.

வெட்கக் கேடு... அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் இரண்டு மடங்கு மாணவர்கள்!

'அரசுப் பள்ளி நம் பள்ளி. அங்கு நம் பிள்ளைகளைச் சேர்க்கலாம். சரியாகச் சொல்லித் தராவிட்டால் நாமே தலையிட்டுக் கேட்கலாம்' என்ற உணர்வு அறவே மழுங்கிக் காணப்படுகிறது.

அதன் விளைவுதான், இப்போது வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள். இதோ...

பள்ளிகளின் எண்ணிக்க

தமிழகத்தில் மொத்தம் 24,050 அரசுத் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் மொத்தம் 14 லட்சத்து 88 ஆயிரத்து 235 மாணவர்கள் பயில்கின்றனர். ஒரு பள்ளிக்கான சராசரி மாணவர்களின் எண்ணிக்கை 61.88 சதவீதம் ஆகும் ஆகும்.

தனியார் பள்ளிகள்

அதேபோல தமிழகத்தில் மொத்தம் தனியார் சார்பில் 6,202 நர்சரி, பிரைமரிப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 279 மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளில், ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 123.39 சதவீதம் ஆகும்.

உயர்நிலைப்பள்ளி

இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள 3,046 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 631 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி 214.58 ஆக உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் 1,955 தனியார் உயர்நிலைப் பள்ளிகளில் 8 லட்சத்து 40 ஆயிரத்து 835 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளியில் சராசரியாக 430 மாணவர்கள் பயில்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறைந்த அளவு மாணவர்கள்

அரசுப் பள்ளிகளில் அதிகமான பள்ளிகளில் குறைந்த மாணவர்கள் படிக்கிறார்கள் எனவும், தனியார் பள்ளிகளில் குறைந்த பள்ளிகளில் அதிக அளவு மாணவர்கள் படிக்கிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது. கணக்கிட்டுப் பார்க்கும்போது அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 2 மடங்கு அதிகமாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

புள்ளி விவரம்

பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் செய்யப்பட்ட பதிவுகளின்படி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

1.31 கோடி மாணவர்கள்

இந்தப் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 57,208 பள்ளிகளில் 1 கோடியே 31 லட்சத்து 93 ஆயிரத்து 950 மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 743 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

37,141 அரசுப் பள்ளிகளில் 55 லட்சத்து 40 ஆயிரத்து 425 மாணவர்கள் படிக்கின்றனர். 8,409 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 29 லட்சத்து 98 ஆயிரத்து 255 மாணவர்களும், 11,658 தனியார் பள்ளிகளில் 46 லட்சத்து 55 ஆயிரத்து 270 மாணவர்களும் படிக்கின்றனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகள்

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைப் பொருத்த வரை 5,059 பள்ளிகளுக்கு 6 லட்சத்து 69 ஆயிரத்து 691 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 132.37 ஆக உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை 338.37 ஆகவும், உயர்நிலைப் பள்ளிகளில் 398.03 ஆகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 1,325.40 ஆகவும் உள்ளது.

English summary
Comparing with the Government schools, more students are studying in the Private schools, sources said. 1.31 crore students are studying in Tamilnadu schools.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia