தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் 5,000 நர்சிங் கல்லூரிகள்!

Posted By:

சென்னை: தமிழகத்தில் அனுமதியின்றி 5 ஆயிரம் நர்சிங் கல்லூரிகள் செயல்படுகின்றன என்று தமிழ்நாடு செவிலியர் கல்லூரிகள் சங்க மாநிலத் தலைவர் பாலாஜி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் அவர், "தமிழகத்தில் 25 அரசு நர்சிங் கல்லூரிகள் உட்பட, 200 மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. இவற்றில் 3 ஆண்டுகள் டிப்ளமோ நர்சிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் 5,000 நர்சிங் கல்லூரிகள்!

மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் போலி நர்சிங் கல்லூரிகள் இயங்குகின்றன. இவை, கேரளாவில் தடைசெய்யப்பட்ட அறக்கட்டளை மூலம் செயல்படுகின்றன. இங்கு 10 ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் கூட சேர்த்து கொள்ளப்படுகின்றனர். 10க்கு 10 அடி அறையில் நடத்துகின்றனர்.

இதில் பயின்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம், நர்சிங் கவுன்சிலில் பதிய முடியாது. இதனால் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அரசு உத்தரவு இருந்தும் போலிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர்.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 7 ஆயிரம் நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் கல்லூரிகளில் படித்தோருக்கு மாவட்டந்தோறும் இலவச பயிற்சி அளிக்க உள்ளோம்.

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் விபரங்களை www.tamilnadunursingcouncil.com ல் தெரிந்து கொள்ளலாம்" என்றார்.

English summary
There are more number of fake nursing colleges present in Tamil Nadu, says tamil nadu nurshing colleges director.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia