மாணவர்கள் கணினி செயல்பாட்டை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவனிக்க அறிவுரை

Posted By:

மாணவர்களின் செயல்பாட்டை நன்கு கண்காணிக்க வேண்டும் என்று கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களின் செயல்பாட்டை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் .

மாணவர்களின்  கணினி மற்றும் மொபைல்  செயல்பாட்டை கண்கானித்தல் கடமையாகும்

மாணவர்கள் ,பெற்றோர்கள் தங்கள் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் இன்டெர்நெட் பயன்படுத்தும் போது மாணவர்கள் அவர்களின் செயல்பாட்டை உற்று நோக்கல் அவசியமாகும்.  மாணவர்கள் ஆசிரியர்கள் அருகில் இருக்கும் போது உடனடியாக வலைதள பக்கங்களை மாற்றுகிறார்களா என்பது அறிவது அவசியம் ஆகும் .

புளுவேல் சாத்தான் விளையாட்டு :

மாணவர்களின்  கணினி மற்றும் மொபைல்  செயல்பாட்டை கண்கானித்தல் கடமையாகும்

வீட்டில் குழந்தைகளிடம் மொபைல் மற்றும் கணினி சாதனங்கள் பயன்பாட்டில் உள்ள மாற்றங்களை காணவேண்டும் . சமிப காலங்களில் பூளு வேல் என்ற இணையதள விளையாட்டினை அறியாது இயக்கி பல குழந்தைகள் தங்களை தானே மாய்த்து கொள்ளும் அளவிற்கு அந்த கணினி விளையாட்டின் வீரியம் மாணவர்கள் , குழந்தைகளை ஆட்கொண்டு அடிமையாக்கி தகாத செயல்களை இலக்குகளாக கொடுத்து அழிவுப்பாதைக்கு இழுத்து செல்கிறது .

வீடு மற்றும் பள்ளிகளில் இருக்கும் மாணவர்களின் செயல்பாட்டை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்கு கண்காணிக்க வேண்டும் . இரஷ்யாவை சேர்ந்த 22 வயது இளைஞன் உருவாக்கிய விளையாட்டு அவனை கைது செய்த பின்பும் அந்த விளையாட்டை நிறுத்த முடியாமல் இயங்குகின்றது.

புளூவேல் விளையாட்டில் சைக்கோவை போல் செயல் படவைத்தல், நல்லிரவில் பேய் படங்கள் பார்க்க வைத்தல், குறிப்பிட்ட உருவத்தில் கைகளில் கீறுதல், யாரிடமும் பேசாமல் இருக்க வைத்தல் அத்துடன் மாடியின் ஓரத்தில் நிற்க வைத்தல் மேலும் தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற இலக்குகளை கொடுத்து மாணவர்களின் உயிரை பறிக்கும் இந்த கொடுர விளையாட்டில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை பணித்துள்ளது.

குழந்தைகள் நடவடிக்கைகள் :

குழந்தைகளுக்கு மொபைல் சாதனங்கள் , கணினி பயன்பாட்டை வழங்குதல் நிறுத்துதல் . குழந்தைகளுக்கு வழங்கப்படும் கணினி பயன்பாட்டை கண்கானித்தல் அத்துடன் அவர்களின் நடவடிக்கைகளை கவனித்து மாற்றம் ஏதேனும் இருப்பின் சரிசெய்தல் அவசியமாகும் .

உடற் பயிற்சி, நீண்ட நடைப் பயிற்சி , குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி பேசுதல் அத்துடன் அவர்களின் விருப்பு வெருப்புகளை மாற்றுதல் அறிவு சார்ந்த பயிற்சியில் ஈடுபடுதல் குழந்தைகளின் நலன் அதிகரிக்க செய்யும். நீதி கதைகள் போதித்தல் வீட்டு பெரியவர்களுடன் இருக்க செய்தல் அவசியம் ஆகும் . குழந்தைகள் நலன் ஆலோசகர்களுடன் குழந்தை குறித்து தெரிவித்து அவர்களின் போக்கில் ஏற்படும் மாற்றங்களை சரிசெய்ய முடியும்.

சார்ந்த பதிவுகள்:

பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் உண்மை பேச நேர்மையாய் இருக்க... நீங்க என்ன செய்யனும் தெரியுமா..?

உங்கள் குழந்தைகள் மீது அக்கறை உள்ள பெற்றோரா நீங்கள்? அப்படினா இதைப் படிங்க..!

பள்ளி மாணவர்களுக்கு ஒன்றியம் முதல் மாநிலம் வரை நுண்கலை போட்டிகள் !! 

English summary
here article tell about monitoring students activities while there use mobile and computer

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia