சென்னை: இந்தியாவில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சாந்தா கொச்சார் கூறினார்.
டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் சாந்தா கொச்சார் பேசியதாவது:

உற்பத்தித்துறையில் ஏராளமான வேலைவாய்ப்பை உருவாக்கியுள்லோம். அதேபோல திறன் மேம்பாட்டுத்துறையிலும் ஏராளமான வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறோம். திறன் மேம்பாட்டுத்துறை, உற்பத்தித் துறையில் ஏராளமான முதலீடுகள் இந்தியாவில் செய்யப்பட்டுள்ளன.
இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தாந், இலங்கை போன்ற நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.
இந்தியாவில் திறன் மேம்பாட்டுக்காக ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இந்த இன்ஸ்டிடியூட்டுகள் மூலம் ஏராளமான நிபுணர்களை உருவாக்கி வருகிறது. அந்த இன்ஸ்டிடியூட்டுகளுக்கு இந்திய அரசும் உதவி வருகிறது.
நடுத்தர ரக தொழிற்சாலைகள், அதில் வேலை செய்ய திறமையான இளைஞர்களை இந்தியாவும், பாகிஸ்தானும் எதிர்பார்க்கிறது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications

