மகாராஷ்டிரத்தில் எம்பிபிஎஸ் படிக்க நுழைவுத்தேர்வு: ஆன்-லைன் பதிவுகள் தொடக்கம்!!

Posted By:

சென்னை: மகாராஷ்டிரத்தில் எம்பிபிஎஸ், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்-லைன் பதிவுகள் தொடங்கியுள்ளன.

இந்தத் தேர்வுக்கு மகாராஷ்டிர சுகாதார மற்றும் டெக்னிக்கல் நுழைவுத் தேர்வு(எம்எச்டி சிஇடி) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் மே 5-ம் தேதி நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிரத்தில் எம்பிபிஎஸ் படிக்க நுழைவுத்தேர்வு: ஆன்-லைன் பதிவுகள் தொடக்கம்!!

தேர்வுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (டிடிஇ) நடத்துகிறது.

இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ், பிஎச்எம்எஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர முடியும்.

இந்த நுழைவுத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.600 வசூலிக்கப்படும்.

ஆன்-லைனில் நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்ய விரும்புபவர்கள் எம்எச்டி சிஇடி இணையதளத்தைத் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். விண்ணப்பங்களை பதிவு செய்ய கடைசி தேதி மார்ச் 22 ஆகும்.

கூடுதல் விவரங்களுக்கு http://mhtcet2016.co.in/proc_reg.aspx என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
The online registrations for the Maharashtra Health and Technical Common Entrance Test (MHT CET) 2016 has begun.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia