திரைத்துறையில் இனி டிகிரி வாங்கலாம்... அழைக்கிறது நம்ம எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி!

Posted By:

சென்னை: திரைத்துறையில் பட்டப் படிப்புகளை சென்னையிலுள்ள எம்ஜிஆர் திரைப்பட இன்ஸ்டிடியூட் அறிமுகம் செய்கிறது.

சென்னை தரமணியிலுள்ள எம்ஜிஆர் திரைப்பட மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட்டில் முன்பு திரைத்துறை சம்பந்தமான படிப்புகள் டிப்ளமோ படிப்புகளாக அறிமுகம் செய்யப்பட்டு வழங்கப்பட்டன.

திரைத்துறையில் இனி டிகிரி வாங்கலாம்... அழைக்கிறது நம்ம எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி!

தற்போது டிப்ளமோ படிப்புகளை பட்டப்படிப்புகளை மாற்றி வருகிறது வழங்குகிறது எம்ஜிஆர் இன்ஸ்டிடியூட். இத்தகவலை செய்தித்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

டிப்ளமோ படிப்புகளாக வழங்கப்பட்டு வந்த படிப்புகளை தற்போது பட்டப்படிப்புகளாக மாற்றி வழங்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று ராஜேந்திர பாலாஜி பேரவையில் தெரிவித்தார்.

மேலும் பகுதி நேர படிப்புகளை இன்ஸ்டிடியூட் அறிமுகம் செய்யவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்ஸ்டிடியூட்டுக்குத் தேவையான கருவிகளை வாங்க ரூ.75 லட்சமும் வழங்கப்படும் என்றார் அவர்.

கூடுதல் விவரங்களுக்கு இன்ஸ்டிடியூட்டின் இணையதளமான http://www.tn.gov.in/miscellaneous/mgrinstitute.html -ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Diploma programmes on film technology offered by the MGR Government Film and Television Institute will be changed to bachelors degree courses, Tamil Nadu minister for Information KT Rajenthrabhalaji told the assembly recently. Making a series of announcements for his department, he said "Chief minister Jayalalithaa has ordered that diploma programmes for film technology be changed as bachelors degree courses."

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia