மருத்துவ மேற்படிப்பு கட்ஆப் மதிப்பெண் குறைப்பு... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ..!

Posted By:

சென்னை ; மருத்துவ மேற்படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க நீட் தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் இந்த ஆண்டு நடத்தியது.

இதற்கு கட்-ஆப் மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு 50 சதவீதமாகவும், இட ஒதுக்கீட்டு (எஸ்சி மற்றும் எஸ்டி) பிரிவினருக்கு 40 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

மாற்றுத் திறனாளிகளக்கு 45 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கட்-ஆப் மதிப்பெண்ணை போதிய மாணவர்கள் எடுக்காத பட்சத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலின் முதுநிலை மருத்துவ கல்வி ஒழுங்குமுறை விதிகள் பின்பற்றப்படும்.

மருத்துவ கல்வி ஒழுங்குமுறை விதிகள்

இருப்பினும், கட்-ஆப் மதிப்பெண்ணை போதிய மாணவர்கள் எடுக்காதபட்சத்தில் இந்திய மருத்துவ கன்சிலுடன் கலந்தாலோசித்து அந்த குறிப்பிட்ட கல்வி ஆண்டு மட்டும், கட்-ஆப் மதிப்பெண்ணை மத்திய அரசு குறைக்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் முதுநிலை மருத்துவ கல்வி ஒழுங்குமுறை விதிகள் கூறுகின்றன.

காலி இடங்கள்

இந்த தேர்வில் போதிய மாணவர்கள் நிரிணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெறாததால் சில பிரிவுகளில் இடங்கள் காலியாக இருக்கும் என்று சில மாநில அரசுகள் மத்திய அரசிடம முறையிட்டன.

கட்ஆப் மார்க் குறைப்பு

இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சிலுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கலந்தாலோசனை நடத்தியது. அதில் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ மேற்படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை 7.5 சதவீதம் குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

9 ஆயிரம் மாணவர்களுக்கு பலன்

அதனால், பொதுப்பிரிவினருக்கு 42.5 சதவீதமாகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 32.5 சதவீதமாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு 37.5 சதவீதமாகவும் கட் ஆப் மதிப்பெண் இருக்கும். இது நடப்பு கல்வி ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும். இந்த முடிவால் கூடுதலாக சுமார் 9 ஆயிரம் மாணவர்கள் பலன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
All Masters across the country the National Examinations Board has held this year to select the Neet Selection to students for medical courses.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia