பிப். 14-ல் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த முடிவு

Posted By:

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் முதுநிலை நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றில் 2016-2017-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்தப் படிப்புகளில் சேர்வதற்க்கு நுழைவுத் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது.

பிப். 14-ல் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த முடிவு

இந்தப் படிப்புகளில் அகில இந்திய இடங்களுக்கான தேர்வுகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படிப்புகளில் தமிழகத்தின் சார்பில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு: www.tnhealth.org என்ற இணையதளத்தைகத் தொடர்புகொண்டு காணலாம்.

English summary
Medical Entrance test for PG courses in Medical colleges will be held on Feb 14. Medical education Directorate has announced this in a press release. For more details students can logon into www.tnhealth.org

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia