ஜூலை 25-ல் மீண்டும் தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

Posted By:

சென்னை: அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ஜூலை 25-ம் தேதியன்று மீண்டும் மறுதேர்வு நடத்த என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே நடைபெற்ற நுழைவுத்தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து மீண்டும் நுழைவுத்தேர்வு நடத்த சிபிஎஸ்இ நேற்று தீர்மானித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பையும் அப்போது சிபிஎஸ்இ வெளியிட்டது.

ஜூலை 25-ல் மீண்டும் தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு:  சிபிஎஸ்இ அறிவிப்பு

அதே நேரத்தில் மறு நுழைவுத்தேர்வு நடத்தப்படும்போது புதிதாக யாரும் அந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கடந்த மே 3-ம் தேதி நடந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. எனவே ஜூலை 25-ல் மீண்டும் தேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

விண்ணப்பிதோருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது. மறுதேர்வு அறிவிப்பை பத்திரிகைகள், வானொலி, டி.வி.களில் விளம்பரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு www.aipmt.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

English summary
The All India Pre-Medical and Pre-Dental Test (AIPMT), 2015 will be re-conducted on July 25, the Central Board of Secondary Education (CBSE) said yesterday. The decision came after the Supreme Court directed a re-test following allegations of large-scale irregularities in the examination held on May 3. Nearly 6.3 lakh candidates had registered for AIPMT in 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia