மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேரில் பெற்று கொள்ளலாம்

Posted By:

மருத்துப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் மாணவர்கள் நேரில் விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர். மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகதேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் 8379 விண்ணப்பங்கள் மாணவர்கள் பெற்றுள்ளனர்.

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேரில் கிடைக்கும் இணையத்தில் பெறமுடியாது


நேற்று முதல் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்க ஆரம்பிக்கபடட்து முதல் பெற்றோர்கள் மாணவர்கள் வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்று சென்றனர். அத்துடன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் 1550 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன, அதிக கூட்டமானதால் மாலை 6 மணிவரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதரத்துறை செயலர் இராதகிருஷ்ணன் அவர்கள் மருத்துவப்படிப்பில் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு அப்படியே தொடங்கும். ஆனால் மாற்று திறனாளிகளுக்கு 3 முதல் 4% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றார்.

ஜூலை 7 ஆம் தேதிவரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணங்கள் ரூபாய் 500 ஆகும். மேலும் விண்ணப்பங்கள் இணையத்தில் பெறமுடியாது என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில அறிவிப்பு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அரசு கல்லுரிகளில் நேரடியாக மட்டுமே பெறமுடியும் ஆகையால் மாணவர்கள் நேரடியாக விண்ணப்பங்கள் பெற்றுகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பித்தவாறு உள்ளனர் .

சார்ந்த தகவல்கள் :

மெடிக்கல் கவுன்சிலிங் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி கல்லுரிகள் தயாராகவுள்ளன

 

English summary
here article tell about mbbs application distribution

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia