தேனி மருத்துவக் கல்லூரியில் இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர் ஆய்வு

Posted By:

சென்னை: தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்திய மருத்துவக்குழு உறுப்பினர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு மயக்கவியல் துறையில் முதுகலை பாடப்பிரிவுகள் தொடங்குவதற்காக அனுமதி கோரப்பட்டது.

தேனி மருத்துவக் கல்லூரியில் இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர் ஆய்வு

இதுதொடர்பாக அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் விண்ணம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தேனி மருத்துவக் கல்லூரிக்கு வந்து ஆய்வுகளை இந்திய மருத்துவக் குழு நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறையில் முதுகலை பாடப்பிரிவுகள் புதிதாக துவங்குவது குறித்து இந்த ஆய்வை இந்திய மருத்துவக் கழு உறுப்பினர் தினேஷ் சிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்திய மருத்துவக் குழு உறுப்பினர் தினேஷ்சிங், மயக்கவியல் துறையில் புதிதாக துவங்கவுள்ள முதுகலை பட்ட படிப்புக்கான பிரிவுக்கு வந்தார். பிரிவில் இடம்பெற்றுள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார் தினேஷ்சிங். இந்த ஆய்வு காலை முதல் இரவு வரை நடைபெற்றதாக தேனி மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆய்வின் போது, தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கதிர்காமு மற்றும் துணை முதல்வர் கே.எம்.மைத்ரேயி ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வுக்கு பின்னர், மருத்துக்கல்லூரியில் முதுகலை படிப்பு தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் இருப்பதாக தினேஷ்சிங் திருப்தி தெரிவித்தார்.

English summary
Medical Council Of India(MCI) official has conducted examine in Theni Medical College yesterday. Theni Medical College has sought permission from MCI to start PG courses in Anasthesia.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia