எம்சிஏ பட்ட மேற்படிப்புகளை அளிக்கும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம்

Posted By:

சென்னை: சென்னையில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

எம்சிஏ படிப்பு தற்போது அனைத்து விதமான வேலைகளுக்கும் பயன்படுவதாக அமைந்துள்ளது. இதனால் இதைப் பயில அதிக அளவில் மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எம்சிஏ சீ்ட்டுக்கு அதிக கிராக்கி உள்ளது.

எம்சிஏ பட்ட மேற்படிப்புகளை அளிக்கும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம்

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப பயன்பாட்டை, மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தவும், மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் இப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரமான எம்சிஏ பட்டமேல்படிப்பு சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் பல்லைக்கழகம் வழங்கி வருகிறது. இந்தப் பட்ட மேல்படிப்பு பயில்வதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் படிப்புக்கேற்ற இளங்கலை பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

மேலும் விரிவான தகவல்கள் அறிய https://hindustanuniv.ac.in என்ற இணையதளத்தை மாணவ, மாணவிகள் தொடர்புகொள்ளலாம்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் எம்சிஏ மட்டுமல்லாமல் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் முதல் பல்வேறு உயர்கல்வி படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
MCA courses has been started in Hindustan University. For more details students can logon into https://hindustanuniv.ac.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia