எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்ப விநியோகம் ஆரம்பம்..!

Posted By:

சென்னை : எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்ப விநியோகம் ஆரம்பம்..!

நீட் தேர்வினை நாடு முழுவதும் மொத்தம் 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 80 ஆயிரம் பேர் எழுதிவிட்டு ரிசல்ட்டிற்காக காத்திருக்கின்றனர். ஜூன் இறுதிக்குள் முடிவு வெளியாகிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வு முடிவு தாமதிப்பதால் பொறியியல் கலந்தாய்விலும் தாமதம் காணப்படுகிறது. இதனால் பொறியியல், மருத்துவம் போன்ற புரோபசனல் கோர்ஸ் படிக்க விரும்பும் மாணவ மாணவியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

நீட் தேர்வு முடிவு வெளிவந்த பிறகு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பின்பு கலந்தாய்விற்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நாளை முதல் விநியோகிகப்படும் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பியுங்கள்.

English summary
MBBS and BDS medical courses application will be issued from tomorrow.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia