எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு... மாணவ, மாணவிகளிடம் குறையாத ஆர்வம்!

Posted By:

சென்னை: எத்தனைப் படிப்புகள் வந்தாலும் சரி...கடிகாரம் ரிப்பேர் செய்யும் படிப்பானாலும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் எழுதும் படிப்பானாலும் சரி..

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் மவுசு குறையாத படிப்பு என்றால் அது எம்பிபிஎஸ் படிப்புகளுக்குத்தான்.

எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு... மாணவ, மாணவிகளிடம் குறையாத ஆர்வம்!

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது 1980-களுக்குப் பிறகுதான். சுயநிதிக் கல்லூரிகள் தோன்றிய பிறகு, அதிக பணம் கொடுத்து எம்பிபிஎஸ் படிப்பில் சேரவும் மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இன்று சுயநதி மருத்துவக் கல்லூரிகளில் சாதாரணமாக எம்பிபிஎஸ் படிப்புக்கு கட்டணம் ரூ.60 லட்சம் முதல் ஒரு கோடி வரை. கல்லூரியின் தரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத்தொகை கூடவோ, குறையவோ வாய்ப்புண்டு.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள் முதலாகவே, எம்பிபிஎஸ் கட்-ஆப் மார்க் என்ன...யாருக்கு சீட் கிடைக்கும்... இந்த முறை எந்த மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி இல்லை போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்தன. இருந்தபோதும் மாணவ, மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் மோகம் குறையவே இல்லை. எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள், தமிழ்நாடு மருத்துவ அறிவியல் துறையில் குவிந்தன.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வந்து எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வை அறிவித்துள்ளது தமிழ்நாடு மருத்துவ அறிவியல் துறை. மேலும் மாணவ, மாணவிகளின் சமவாய்ப்பு எண்ணும் (ரேண்டம் எண்) அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் 2,257 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும், 551 சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

வரும் 25-ஆம் தேதி வரை முதல் கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், கோவை பி.எஸ்.ஜி. உள்பட 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 551 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் இந்தக்க கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.

சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களும் முதல் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.

இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் மீதமுள்ள இடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

English summary
The first phase of counselling for students who applied for MBBS and BDS in Govt Medical colleges will be held on 19th June at Chennai.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia