எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சிலிங்: 73 பேர் இதுவரை தேர்வு!

Posted By:

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்காக முதல் நாள் நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சிலிங்: 73 பேர் இதுவரை தேர்வு!

தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்காக கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் இந்த கவுன்சிலிங் நடைபெற்றது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள் என மூன்று சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 73 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கும் ஒரு மாணவர் பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சிலிங்: 73 பேர் இதுவரை தேர்வு!

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் எந்த மாணவருக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சிலிங்: 73 பேர் இதுவரை தேர்வு!

கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் அரங்கிலேயே நடைபெற்றது.

English summary
MBBS, BDS Counselling has began in Chennai Omanthoorar Multi-speciality Hospital yesterday. In the first day counselling 73 students has been selected for the courses.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia