மேட் தேர்வு வந்தாச்சு....!! ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க...!!

Posted By:

டெல்லி: எம்பிஏ படிப்புகளில் சேர உதவும் மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் (மேட் தேர்வு) தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுத ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வை ஆல் இந்தியா மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் (ஏஐஎம்ஏ) நடத்துகிறது. தேர்வு வரும் மே 1-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் சார்ந்த தேர்வு மே 7-ம் தேதி நடைபெறும்.

மேட் தேர்வு வந்தாச்சு....!! ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க...!!

இந்தத் தேர்வை எழுத விரும்புவோர் ஆன்-லைனில் தங்களது பெயர்களைப் பதிவு செய்யவேண்டும். மேலும் தேர்வு எழுத ரூ.1,200 கட்டணமாக செலுத்தவேண்டும். இதை டிமாண்ட் டிராஃப்டாக எடுத்து டெல்லியில் மாற்றத்தக்கதாக அனுப்பவேண்டும்.

ஆன்-லைனில் விண்ணப்பிக்க https://www.aima.in/ என்ற லிங்க்கை கிளிக் செய்யவேண்டும்.

இந்தத் தேர்வு இரண்டரை மணி நேரம் டநைபெறும். நாடு முழுவதும் 22 மையங்களில் தேர்வு நடைபெறும். மேலும் துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இந்தத் தேர்வு நடைபெறும். மே 7-ம் தேதி நடைபெறவுள்ள கம்ப்யூட்டர் சார்ந்த தேர்வு நாடு முழுவதும் 12 மையங்களில் நடைபெறுகிறது.

English summary
Management Aptitude Test (MAT) 2016 , conducted by the All India Management Association (AIMA) is scheduled to be held on May 1 ( paper based test) and May 7 ( computer based test). Aspirants, who are interested to appear for the test should have to apply online. Candidates should submit the demand draft of Rs 1,200, drawn in favour of 'All India Management Association' payable at Delhi from any bank.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia