உ.பி மதுரா மாணவர்களின் மாஸ் பிட்.... ஆங்கிலத் தேர்வு ஒத்தி வைப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் 10ம் வகுப்பு ஆங்கில பொதுத் தேர்வில் மாணவர்கள் காப்பியடித்ததால் அங்கு ஆங்கிலத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

லக்னோ : உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் மாணவர்கள் 10ம் வகுப்பு ஆங்கில பொதுத் தேர்வில் காப்பியடித்து எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் முறைகேடு நடந்த இடங்களில் ஆங்கிலத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவ மாணவியர்கள் அதிகமாக காப்பியடித்து எழுதுவதாக புகார் எழுந்து வருகிறது. இது தொடர் கதையாக நீடிக்கிறது.

நேற்றைய 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் மாணவ மாணவியர்கள் கூட்டாக சேர்ந்து காப்பி அடித்து தேர்வு எழுதியுள்ளனர். இந்தப் பிரச்சனையால் அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது. காப்பியடித்து எழுதுவது அதிகரித்து வருகிறது.

வெளிப்படையாக காப்பியடித்த மாணவர்கள்

வெளிப்படையாக காப்பியடித்த மாணவர்கள்

மதுராவில் நேற்று நடந்த 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் மாணவ மாணவியர்கள் வெளிப்படையாகக் காப்பியடித்தள்ளனர். நோட்ஸ், புத்தகங்கள், பிட் பேப்பர்களை வைத்து அனைத்து மாணவர்களும் கூட்டாக காப்பி அடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.

ஆங்கிலத் தேர்வு ஒத்தி வைப்பு

ஆங்கிலத் தேர்வு ஒத்தி வைப்பு

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று நடந்த 10ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் காப்பியடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். அதனால் ஆங்கிலத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிசடிவி கேமரா
 

சிசடிவி கேமரா

மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என எல்லோரும் அவர்கள் காப்பியடித்து எழுதுவதற்கு துணைபுரிந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அங்குள்ள சிசி டிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் மாணவர்களின் முறைகேடு சம்பந்தப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் நண்பர்கள் உடந்தை

பெற்றோர்கள் நண்பர்கள் உடந்தை

மாணவர்களுக்கு காப்பியடிப்பதற்கு தேவையான நோட்ஸ், மற்றும் பிட் பேப்பர்கள், புத்தகங்கள் ஆகியவை அவர்கள் உறவினர்களாலேயே வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறை

மேலும் பொதுத் தேர்வு என்பது மிகவும் முக்கியமானத் தேர்வாகும். அது மாணவர்களின் திறமை மற்றும் அறிவாற்றலை சோதிப்பதற்காக நடத்தப்படுவதாகும். அதில் உண்மையாக இருந்தால்தான் அவரவர் உண்மை திறமை வெளிப்படும். எனவே கூட்டுக் காப்பி அடித்து மாணவ மாணவியர்கள் எழுதுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டிய பொறுப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Many more students were caught copying in the 10th english examintions in UP. They were caught by the CCTV camera.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X