'கல்வி நகர'த்தில் பிஎச்.டி. படிக்கவேண்டுமா?

Posted By:

சென்னை: கல்வி நகரம் என்று அழைக்கப்படும் மணிப்பால் நகரில் அமைந்துள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்பு படிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் வட கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ளது பெருமைமிகு மணிப்பால் நகரம். இந்த நகரத்துக்கு கல்வி நகரம் என்றே பெயர். நகர் முழுக்க கல்விச் சாலைகள் நிறைந்துள்ளன. புகழ்பெற்ற மணிப்பால் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இங்கு அமைந்துள்ளதால் இந்த நகருக்கு கல்வி நகரம் என்றே பெயர்வந்துவிட்டது. வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு ஆர்வத்துடன் பயில வருகின்றனர்.

'கல்வி நகர'த்தில் பிஎச்.டி. படிக்கவேண்டுமா?

அளவில் சிறிய நகரமாக இருந்தாலும் கல்வியில் பெரிய நகரமாகவே இருக்கிறது இந்த மணிப்பால்.

மணிப்பால் நகரில் அமைந்துள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தில் முழு நேர பிஎச்.டி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அலைட் ஹெல்த் சயின்ஸஸ், பேசிக் சயின்ஸ், என்ஜினீயரிங், இன்பர்மேஷன் சயின்ஸ், மெடிசின், பார்மசி, ஸ்டாட்டிஸ்டிக்ஸ், மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பல பிரிவுகளில் பிஎச்.டி. படிப்பை இங்கு பயில முடியும். 2015-16-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கையை மணிப்பால் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

மேலும் பல படிப்புகளுக்கு இங்கு உதவித்தொகையும் அளிக்கப்படும். பி.ஜி. படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்ய முடியும். விண்ணப்பங்களை ஆன்-லைனில் விண்ணப்பிக்க முடியும். மேலும் ரூ.600-க்கு கேட்புக் காசோலையை மணிப்பால் பல்கலைக்கழகம் என்ற பெயரில் எடுத்து Admissions Office, Manipal University, Manipal - 576104 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் செப்டம்பர் 30 ஆகும். படிப்புகள் 2016 ஜனவரி 1-ம் தேதி தொடங்கும்.

மேலும் விவரங்களுக்கு மணிப்பால் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://manipal.edu/mu.html -ல் தொடர்புகொள்ளளலாம்.

English summary
Manipal University, Manipal has invited Applications for admission to full time Doctor of Philosophy (Ph.D) programmes offered in Allied Health Sciences, Basic Science, Engineering, Information Science, Medicine, Pharmacy, Statistics, Management, Regenerative Medicine, Life Sciences, Library & Information Science, Communication, Atomic & Molecular Physics, European Studies and Natural Sciences in their respective schools or departments.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia