சென்னை: கல்வி நகரம் என்று அழைக்கப்படும் மணிப்பால் நகரில் மருத்துவப் படிப்புகள் படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகிலுள்ளது வட கன்னட மாவட்டம். இங்குள்ள நகரம்தான் மணிப்பால். மணிப்பால் நகரம் முழுவதும் முக்கிய கல்வி நிலையங்கள் விரவிக் கிடக்கின்றன. இதனால் இதனை கல்வி நகரம் என்று அழைக்கின்றனர்.

இங்கு மணிப்பால் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிலையங்கள் உள்ளன.
தற்போது மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எம்பிபிஸ், பிடிஎஸ், பிபிடி, பிஓடி, பிஎஸ்சி(சுகாதார நிர்வாகம்) உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் படிக்க வாய்ப்புகளை மணிப்பால் பல்கலைக்கழகம் தருகிறது.
இந்த படிப்புகள் அனைத்தும் அடுத்த கல்வியாண்டில் அதாவது 2016-ல் தொடங்கும்.
மேலும் விவரங்களுக்கு மணிப்பால் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://manipal.edu/mu/admission/last-date-for-receipt-of-applications---class-commencement-dates.html-ல் காணலாம்


Click it and Unblock the Notifications

