பட்டப் சான்றிதழ்களில் தந்தையின் பெயர் கட்டாயமாக்கப்பட வேண்டாம் .. மேனகா காந்தி

Posted By:

சென்னை : மாணவ மாணவிகள் பட்டப் படிப்புச் சான்றிதழ்களில் தந்தையின் பெயர் இடம் பெற வேண்டும் என்ற கட்டாய விதியை மாற்றி அமைக்க வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் வளமேம்பாட்டு மந்திரி மேனகா காந்தி மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேக்கருக்கு கடிதம் ஒன்றினை எழுதி உள்ளார்.

திருமண உறவு முறிந்த குடும்பங்களில் கணவரை பிரிந்து பெண்கள் தனியே வாழ்வது என்பது இன்றையக் காலக்கட்டத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. இது மகிவும் வேதனைக்குரிய ஒரு விஷயம் தான் ஆனாலும் அதற்கேற்ப விதிகள் மாற்றப்படுவதும் அவசியமாக உள்ளது.

பட்டப் சான்றிதழ்களில் தந்தையின் பெயர் கட்டாயமாக்கப்பட வேண்டாம் .. மேனகா காந்தி

கணவரை பிரிந்து வாழும் பெண்களின் குடும்பத்தில் இருந்து படிக்கும் மகனோ மகளோ பட்டப்படிப்புச் சான்றிதழ் பெறுவதற்கு தந்தையின் பெயர் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாய விதியாக இருக்கிறது.

விதி முறைகள்

கணவரைப் பிரிந்தும் தனித்தும் வாழும் பெண்கள் இதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். உணர்வுப்பூர்வமான இந்த பிரச்சயையை கருத்தில் கொண்டு கணவரைப் பிரிந்து வாழும் பெண்களின் குடும்பத்தில் உள்ள மகன் அல்லது மகள் பட்டப்படிப்புச்சான்றிதழ் பெறுவதற்கு தந்தையின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்கிற தற்போதைய விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் குறிப்புகளை மாற்ற வேண்டும் என்று மேனகா காந்தி கூறியுள்ளார்.

கடவுச் சீட்டு

இதற்கு முன்பு கணவரைப் பிரிந்து வாழும் பிரியங்கா குப்தா அமைச்சர் மேனகா காந்திக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜீக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தனது மகளின் கடவுச் சீட்டில் தன்னுடைய கணவரின் பெயர் இல்லாமல் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

வெளியுறவு அமைச்சகம்

அதில் தனது மகளின் கடவுச் சீட்டில் தன் கணவரின் பெயரைக் குறிப்பிடாத வகையில் விதியில் மாற்றங்கள் கொண்டுவரப் படவேண்டும் எனக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து கடவுச் சீட்டுப் பெற தாய் அல்ல தந்தையின் பெயர் ஆகிய இருவர் பெயரையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. யாராவது ஒருவர் பெயர் குறிப்பிடப்பட்டால் போதுமானது எனவும் கணவரைப் பிரிந்து வாழும் பெண்கள் தங்கள் திருமணச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை என வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது,

English summary
Maneka said she been approached by several women, single, separated or divorced, who are unable to procure their child’s degree certificate without giving the child’s father’s name.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia