உதவித்தொகையுடன் சிங்கப்பூரில் ஹோட்டல் மேலாண்மை நிர்வாகம் பயில வாய்ப்பு!!

Posted By:

சென்னை: சிங்கப்பூரிலுள்ள ஹோட்டல் நிர்வாகம் தொடர்பான படிப்புகளை பயில புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மகாத்மா சர்வதேச உணவக மேலாண்மை பயிற்சிக் கல்லூரி வாய்ப்புகளை வழங்குகிறது.

கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அங்கு வேலைவாய்ப்புகளையும் பெற்றுத் தருகிறது மகாத்மா சர்வதேச உணவக மேலாண்மை பயிற்சிக் கல்லூரி வாய்ப்பை வழங்கும் பணியை தொடங்கியுள்ளது.

உதவித்தொகையுடன் சிங்கப்பூரில் ஹோட்டல் மேலாண்மை நிர்வாகம் பயில வாய்ப்பு!!

இதுதொடர்பாக அந்த இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழில் சார்ந்த கல்வி, தொழில் மேலாண்மை கல்வி போன்றவற்றுக்கு பெயர் பெற்றவை சிங்கப்பூர் கல்வி நிறுவனங்கள்தான். எனவே, சிங்கப்பூரில் உள்ள கால்மேன் கல்லூரி & ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களுடன் மகாத்மா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆண்டு முதல் மகாத்மா கல்லூரி மாணவர்கள் இன்டர்நேஷனல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் பட்டயப் படிப்பை முதல் 2 ஆண்டுகள் புதுக்கோட்டை மகாத்மாவிலும் 3-வது ஆண்டை சிங்கப்பூரில் உள்ள கால்மேன் கல்லூரியிலும் படிக்க முடியும்.

சிங்கப்பூரில் படிக்கும் காலத்தில் மாதந்தோறும் 900 டாலர்கள் ஊக்கத் தொகையாக மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

மகாத்மா இன்டர்நேஷனல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் முடித்த மாணவர்கள் பின்பு அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பையும் அங்கேயே படிக்கலாம். படிப்பு முடிந்ததும் சிங்கப்பூரிலோ அல்லது வேறு நாடுகளிலோ வேலை செய்யலாம். சுமார் 21,000 மாணவர்களை கொண்டு இயங்கிவரும் சிங்கப்பூரின் கால்மேன் கல்லூரியில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு தொழில் சிறப்பாய் அமையும்.

புதுகை மகாத்மாவில் படிக்க வாய்ப்பு கிடைத்தால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க 10, 12 -ம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை மகாத்மா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்.எம் நகர், ஆரியூர் என்ற முகவரியிலும், 9965512997, 80129 20222, 80129 20333 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

மகாத்மா கல்லூரி வளாகத்தில் பொறியியல் கல்லூரி, கலை-அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, நர்சிங் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

English summary
Mahatma Institute in Pudukottai has given chance students to learn Hotel Managenment courses in Singapore with scholarship.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia