மகாராஷ்டிர மாநில அரசு கல்வித் திட்டத்தில் இந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு சமூகவியல் பாடத்திட்டத்தில் ஓர் பாலின குடும்பம், ஒற்றை பெற்றோர் முறை உள்ளிட்டவை குறித்த பாடங்களை இணைத்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த காலங்களில் குடும்பங்கள் இரு வகையாகவே பிரிக்கப்பட்டிருந்தன. அவை, ஒன்று கூட்டுக் குடும்பமாகவும், மற்றது தனிக் குடும்பமாகவுமே நம் பள்ளிப் பாடப்புத்தகத்தில் கற்பிக்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போதைய நாகரீக வளர்ச்சியடைந்த நிலையில் பலவகையாக குடும்பங்கள் மாறி உள்ளன. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று ஒரு பாலினத்தவர் மணம் புரிந்து வாழ்வது தவறில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு முன்னதாக மணம் புரியாமல் உறவு கொள்வதும், சேர்ந்து வாழ்வதும் சட்டப்படி தவறில்லை எனக் கடந்த 2013 ஆம் வருடம் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதனைக் கருத்தில் கொண்டு மகாராஷ்டிர மாநில அரசின் பாடப்புத்தகத் துறை, அம்மாநில 11-ஆம் வகுப்பு சமூகவியல் பாடப் புத்தகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2019-20) சில மாறுதல்களை செய்துள்ளது.
அதில், ஒரு பாலின குடும்பம், ஒற்றை பெற்றோர் குடும்பம், சேர்ந்து வாழும் குடும்பம் மற்றும் மாற்றாந் தாய் அல்லது தந்தை உள்ள குடும்பம் உள்ளிட்டவற்றை மாணவர்களும் அறியும் வகையில் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது.
இந்த பாடப் புத்தகத்தில் ஓர் பாலின திருமணம், பாலின பாகுபாடின்மை குறித்தும் பாடங்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












