கொட்டாவி விட்ட மாணவனுக்கு பளார்... தலைமை ஆசிரியை மீது வழக்கு!

மஹாராஷ்டிர மாநிலத்தில்,உள்ள தனியார் பள்ளியில் காலை இறைவணக்கத்தின் போது, கொட்டாவி விட்ட மாணவனை அடித்த, பள்ளி தலைமை ஆசிரியர் மீது, புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

By Kani

மஹாராஷ்டிர மாநிலம் மிரா சாலையில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கொட்டாவி விட்ட மாணவனை அறைந்த, பள்ளி தலைமை ஆசிரியை மீது, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொட்டாவி விட்ட மாணவனுக்கு  பளார்... தலைமை ஆசிரியை மீது வழக்கு!

இந்த சம்பவம் குறித்து நயாநகர் ஆய்வாளர் பாலாஜி கூறுகையில்,

பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலை இறைவணக்கத்தின் போது அதே பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் கொட்டாவி விட்டுள்ளார். இதைக் கண்ட தலைமை ஆசிரியை, மாணவனை கண்டித்ததோடு, கன்னத்தில் அறைந்துள்ளார். வீடு திரும்பிய மாணவன் இந்த விவகாரத்தை, தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து மாணவனின் தந்தை அளித்த புகாரையடுத்து, தலைமை ஆசிரியர் மீது சட்டப் பிரிவு 323 கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஜூன் 19 ஆம் தேதி ஸ்கூல் புக் எடுத்து வர மறந்த காரணத்தால் இதே மாணவனுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டதாகவும் இதனால் மாணவன் பள்ளி செல்ல மறுப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ளதாகவும் பாலாஜி கூறினர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாலாஜி தெரிவித்தார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Maharashtra: School headmistress booked for slapping student for yawning
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+