காமராஜ் பல்கலைகழகத்தில் சிண்டிகேட் நிர்வாக குழு இல்லாத காரணத்தால் முவுகள் எடுப்பதில் சிக்கல்

Posted By:

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர் இன்றி பல்கலை முடிவு எடுப்பதில் சிக்கல் விரைந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை .

நிர்வாக குழு சிரமைத்து பல்கலை கழக நடவடிக்கையை ஒழுங்குப்படுத்த வேண்டும்

மதுரை காமாராசர் பல்கலை கழகத்தில் சிக்கல் அலுவலக நிர்வாக முடிவு எடுக்க துணை வேந்தருடன் இணைந்த 11 பேர் கொண்ட சிண்டிகேட் குழு உறுப்பின்ரகள் இன்றி எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. செனட் சார்பில் 4 உறுப்பினர்கள் மற்றும் கல்வி பேரவை உறுப்பினர் சார்பில் 3 பேரும், இணை பேராசிரியர் ஒருவர் உட்பட மொத்தம் பதினொரு உறுப்பினர்கள் சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் தற்பொழுது மூன்று பேர் மட்டுமே உள்ளனர். கவர்னரின் பிரதிநிதிகள் முரளி பஷித் மற்றும் தென்னவன் சென்னையில் உள்ளனர். விஜயரங்கன் மட்டுமே மதுரையில் உள்ளார் . ஆகவே பல்கலைகழகம் தொடர்பான எந்த முடிவானாலும் சென்னக்கு சென்று எடுக்க வேண்டிய நிலை உள்ளது. பல்கலைகழகத்தின் நிதி தேவையற்ற முறையில் விரயமாவதை தடுக்கவும் முடிவு எடுக்க வேண்டும் .

நிர்வாக குழு சிரமைத்து பல்கலை கழக நடவடிக்கையை ஒழுங்குப்படுத்த வேண்டும்

மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவியும் கடந்த இரண்டு வருடமாக காலியாக இருந்தது. சமிபத்தில்தான் துணை வேந்தர் பதவியில் பி.பி செல்லதுரை அவர்களை நியமிக்கப்பட்டார்.
பல்கலைகழகத்தில் எந்த நடவடிக்கையும் சரியாக நடக்கவில்லை.

பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கும் 15 உறுப்பினர்கள் தேர்வு ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நடக்கவில்லை . 2011ல் தேர்தல் அறிவிப்பானது ஓட்டுப்பதிவுக்கு முன் இருந்து நின்று போனது மீண்டும் தேர்தல் நடத்த செல்லதுரை முடிவு எடுக்க வேண்டும் .

English summary
above article mentioned madurai kamaraj university adminatration team and re fix issues of university

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia