தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!

மத்திய அரசுப் பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் மதுரையைச் சேர்ந்த லிந்தியா. தினமும் 9 மணி நேரம் முதல் 10 மணி நேரம் கடுமையாகப் படித்து முதல் முறையிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் லிந்தியா.

சிவில் சர்வீஸஸ் தேர்வில் சாதனை படைத்துள்ள இவர் மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்தவர். 25 வயதான லிந்தியா முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 354வது இடம் (ரேங்க்) பிடித்து வெற்றி பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி  தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!

சாதனையாளரான லிந்தியா கூறியதாவது:

இளம்வயதிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் இளநிலையில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் வெற்றிகரமாக படித்து முடித்தேன். பின்னர் சில காலம் ஒரு நிறுவநத்தில் கன்சல்டன்டாக பணி செய்தேன். பின்னர் யுபிஎஸ்சி தேர்வு எழுதவேண்டும் என்ற எண்ணம் ஏற்ப்டடது. இதையடுத்து யுபிஎஸ்சி தேர்வை முழுமூச்சாக எழுதுவதற்காக வேலையை விட்டுவிட்டேன்.

பெற்றோர், எனது சகோதரர் தந்த உற்சாகத்தால் தற்போது வெற்றி பெற்றுள்ளேன். முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் 354 வது ரேங்க் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

என்னுடைய ரேங்குக்கு தற்போது ஐ.ஏ.எஸ். பணி கிடைக்க வாய்ப்பிருப்பதாக அறிகிறேன். அது இல்லாவிட்டாலும் ஐ.பி.எஸ். நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன். எந்தப் பணி கிடைத்தாலும் அதில் இணைந்து சிறப்பாக பணிபுரிய தயாராக உள்ளேன்.

வீட்டில் இருந்தபடி தினமும் 9 முதல் 10 மணி நேரம் படிப்பேன். கடுமையானப் படிப்பு, விடாமுயற்சி, ஒரே சிந்தனையால் தற்போது யுபிஎஸ்சி தேர்வில் அபார வெற்றி பெற்றுளே்ளேன்.

தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி  தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!

தேர்வுக்குத் தயாராகும்போது ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையிலும் மாதிரி யுபிஎஸ்சி தேர்வு எழுதி எழுதி பார்பேன். குறைந்த மதிப்பெண் வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து தொடர்ந்து மாதிரித் தேர்வுகளை எழுதிப் பழகினேன். அதற்கு நல்ல பலன் தற்போது யுபிஎஸ்சி தேர்வு எழுதும்போது கிடைத்தது.
இளம் வயதில் சமூகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவதற்கான அதிகாரம் குடிமைப் பணி அதிகாரிகளால்தான் முடியும்.

அதை பத்திரிகைகளில் படிப்பத் மூலம் உணர்ந்தேன். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரம்மிக்க பதவிகளில் பணியாற்றுவதற்கு நல்ல செயல்திறன் வேண்டும்.
யுபிஎஸ்சி தேர்வுக்கு ஆப்ஷனல் பேப்பர், மாதிரித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளுக்கும் மட்டும் ஐஏஎஸ் பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

இந்த யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் புரிந்துகொண்டு சுய விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் படிக்க வேண்டும். அப்போதுதான் யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.

யுபிஎஸ்சி தேர்வுகளில் 3 அல்லது நான்கு முறைக்கு மேல் தேர்வெழுதியும் வெற்றி பெற முடியவில்லை என்றால் அடுத்து என்ன செய்யலாம் என்பதை தீர்மானித்துவிட்டு தேர்வுக்குத் தயாராக வேண்டும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு அவசியம். இவ்வாறு லிந்தியா தெரிவித்தார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Union Public Service Commission announced the results of the Civil Services Examination 2023 on Tuesday. A total of 45 candidates from Tamil Nadu have been on the list of successful candidates this year. Lindhiya Lan From Madurai secures 354th rank.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+