சென்னைப் பல்கலை தேர்வு முடிவுகள் இன்று இரவு வெளியாகின்றன

Posted By: Jayanthi

சென்னை, மார்ச் 18: சென்னைப் பல்கலைக் கழக எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.

சென்னைப் பல்கலைக் கழக தொலைதூர கல்வி நிறுவனம் சார்பில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்சி உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப படிப்புகள் நடத்தப்படுகின்றன.

சென்னைப் பல்கலை தேர்வு முடிவுகள் இன்று இரவு வெளியாகின்றன

இந்தபடிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த டிசம்பரில் நடந்தது. இதற்கான முடிவுகள் சென்னைப் பல்கலைக் கழக இணைய தளத்தில் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகிறது.

மேற்கண்ட தேர்வுகளின் மறு மதிப்பீடு செய்ய விரும்புவோர் தாள் ஒன்றுக்கு ரூ.750 வீதம் செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை பல்கலைக் கழக இணைய தளம் மூலம் 25ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சென்னைப் பல்கலைக் கழக தொலை தூர கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
The University of Madras Examinations results will be released tonight 8 pm in its website.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia