தேசிய அளவிலான தகுதித் தேர்விற்கான (நெட்) இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைக்கப்படுவதாகச் சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

உதவி பேராசிரியர், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற நடத்தப்படும் தேசிய அளவிலான தகுதி காண் தேர்வே நெட் ஆகும். வரும் டிசம்பா் மாதத்தில் எம்.டி.ஏ சார்பில் இத்தேர்வு நடைபெறவுள்ளது.
இத்தேர்வில் தமிழகத்திலிருந்து பங்கேற்க உள்ள எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பயனடையும் வகையில் இலவச பயிற்சி வகுப்பை சென்னைப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டிற்கான பயிற்சி வகுப்பு அக்டோபா் 19 முதல் நவம்பா் 17ம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த பயிற்சி வகுப்பு நவம்பா் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பா் 2 முதல் 24 வரையிலும் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் https://www.unom.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












