சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி தேர்வு எழுதியவரா நீங்கள்.. இன்று இரவு ரிசல்ட் வருது!

Posted By:

சென்னை : சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ வகுப்புகளில் தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று இரவு வெளியிடப்படுகின்றன.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர்களுக்குத் தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று இரவு 8 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி தேர்வு எழுதியவரா நீங்கள்.. இன்று இரவு ரிசல்ட் வருது!

தேர்வு முடிவுகளை www.ideuom.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை இரவு 8 மணி முதல் ஆன்லைன் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மறு மதிப்பீடு, மறு கூட்டல் ஆகியவற்றுக்கும் அதே இணையதளத்தில் போய் விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டுக்கு ஒரு தாளுக்கு ரூ.1,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டலுக்கு ஒரு தாளுக்கு ரூ.300 செலுத்தவேண்டும். மறு கூட்டலுக்கும், மறுமதிப்பீட்டுக்கும் நாளை முதல் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

English summary
Madras University Distance Education Exam result will publish tonight. Ug. Pg and diploma results are release today night.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia