சென்னை பல்கலை. தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை ஏப்.30 வரை நீட்டிப்பு

Posted By:

சென்னை : தொலைதூரக் கல்வியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்களே சென்னை பல்கலைக் கழகம் ஏப்ரல் 30ம் தேதி வரை மாணவர் சேர்கைகையை நீட்டித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ வகுப்புகள் உள்ளன. மாணவ மாணவியர்கள் தங்கள் விரும்பிய படிப்பை தேர்வு செய்து தொலைதூரக் கல்வியின் மூலம் பயில முடியும்.

சென்னை பல்கலை. தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை ஏப்.30 வரை நீட்டிப்பு

தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

அதாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொலைதூரக் கல்வி நிறுவன ஒற்றைச் சாளர சேர்க்கை மையம் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு பேராசிரியர் எஸ். கருணாநிதி தொலைதூரக்கல்வி சேர்க்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியினை தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ வகுப்புகளில் தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று இரவு 8 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

மேலும் இதுக்குறித்த விரிவான விபரங்களை www.ideunom.ac.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

English summary
Registarar Responsible Professor S. Karunanidhi has told taht Madras University Distance Education Admission date extended till 30 April 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia