இனி ஹிந்தியில் தொழில்நுட்பத் தேர்வு எழுதலாம்! - மத்திய பிரதேச அரசு அனுமதி

Posted By:

சென்னை: மருத்துவக் கல்விக்கான பாட புத்தகங்களை ஹிந்தி மொழியில் வெளியிட்டு சாதனை படைத்த மத்தியப் பிரதேச அரசு தற்போது மேலும் ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இனி தொழில்நுட்பக் கல்வித் தேர்வுகளை ஹிந்தி மொழியில் எழுதலாம் என்பதே அது. அதற்கான அனுமதி மத்தியப் பிரதேச அரசு வழங்கி அதற்கான அறிவிப்பையும் இப்போது வெளியிட்டுள்ளது.

இனி ஹிந்தியில் தொழில்நுட்பத் தேர்வு எழுதலாம்! - மத்திய பிரதேச அரசு அனுமதி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜீவ் காந்தி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் இனி நடைபெறக் கூடிய பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் ஹிந்தி மொழியில் விடை எழுதலாம்.

மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் கேள்வித் தாள்களில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கேள்விகள் அச்சிடப்பட்டிருக்கும். அதற்கு பதிலளிக்கும் மாணவர்கள் இந்த இரண்டு மொழிகளில், தாங்கள் விரும்புகின்ற மொழியில் பதில் அளிக்கலாம்.

இந்தத் தகவலை மாநில தொழில்நுட்பக் கல்வித் துறை அமைச்சர் உமாசங்கர் குப்தா நேற்று தெரிவித்தார்.

அரசின் அறிவிப்பால் மத்தியப் பிரதேச மாநில மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
After deciding to make available medical syllabus books in Hindi, the Madhya Pradesh Technical Education Department has decided to conduct examination of engineering papers too in Hindi. The MP Technical Education Department has decided to make papers of engineering in Hindi along with English in technical colleges affiliated to the state's Rajiv Gandhi Proudyogiki Vishwavidyalaya (RGPV) from next session, a Public Relations Department official said on Thursday.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia