எம்.பார்ம், முதுநிலை இயன்முறை படிப்பு: மே 18-இல் கவுன்சிலிங்...!!

Posted By:

சென்னை: முதுநிலை இயன்முறை மருத்துவம், எம்.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்காக இந்த கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

எம்.பார்ம், முதுநிலை இயன்முறை  படிப்பு:  மே 18-இல் கவுன்சிலிங்...!!

கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்களுக்கான அழைப்புக் கடிதத்தை சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் மே 18-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் காலை 10 மணிக்கும், எம்.பார்ம் படிப்புக்கான கவுன்சிலிங் காலை 10.30 மணிக்கும் தொடங்கவுள்ளது.

இந்தத் தகவலை மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

English summary
Tamilnadu Medical education, Directorate has announced the counselling dates for M.Pharm Courses. For more details students can logon into www.tnhealth.org
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia