எம்.எல். தேர்வு மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியாகிறது

Posted By:

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய எம்.எல். (தனிப் படிப்பு) மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.

கடந்த கல்வியாண்டில் வெளியான எம்.எல். படிப்பில் தேர்ச்சி பெறாதவர், மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்கள் மறுமதிப்பீடு கோரி சென்னை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பத்திருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களது விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதைத் தொடர்ந்து மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

எம்.எல். தேர்வு மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியாகிறது

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட எம்.எல். தேர்வு மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட உள்ளன.

தேர்வு முடிவுகளை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளைக் காண மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.

English summary
Madras University has announced tha M.L Revalued exam results will be released today. Students can get results from the site www.unom.ac.in
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia