இளைஞர்கள் படித்துவிட்டு இந்தியாவிலேயே வேலை பார்க்க வேண்டும்...: நெல்லை கண்ணன் அட்வைஸ்

Posted By:

திருச்சி: படித்து முடித்த பின் இளைஞர்கள் வேலைகளுக்காக வெளிநாடு செல்வது நாட்டுப்பற்று மிக்க செயல் அல்ல, நம் நாட்டிலேயே சேவை செய்ய வேண்டும் என திருச்சி அருகே எம்.ஏ.எம். கல்வியியல் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரபல பேச்சாளர் நெல்லைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி அருகே சிறுகனூர் பகுதியில் உள்ளது எம்.ஏ.எம். கல்வியல் கல்லூரி. இக்கல்லூரியில் நேற்று 6வது விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.

இளைஞர்கள் படித்துவிட்டு இந்தியாவிலேயே வேலை பார்க்க வேண்டும்...: நெல்லை கண்ணன் அட்வைஸ்

இவ்விழாவின் துவக்க நிகழ்வாக கல்வியியல் கல்லூரியின் முதல்வர் கு.இரவிக்குமார் வரவேற்புரை மற்றும் ஆண்டு அறிக்கை வாசித்தார். கல்லூரியின் தாளளார் எம்.ஏ.பாத்திமா மன்சூர் துவக்கவுரை வழங்கினார்.

மேலும் கல்வி குழுமத்தின் மன்சூர் அவர்கள் முன்னிலை வகித்தார். எம்.ஏ.எம் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் அல்ஹாஜ் எம்.அப்துல்மஜீது தலைமை தாங்கினார். தமிழ்த்துறை பேராசிரியர் இரா.அலெக்சாண்டர் சிறப்பு விருந்தினருக்கான அறிமுகவுரை வழங்கினார்.

இளைஞர்கள் படித்துவிட்டு இந்தியாவிலேயே வேலை பார்க்க வேண்டும்...: நெல்லை கண்ணன் அட்வைஸ்

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு விழா பேருரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், ‘நமது தாய்மொழியானது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. எனவே அதனை போற்றி வளர்க்க வேண்டும்.

ஆசிரியர் பணிக்கு தாய்மொழி கல்வியானது மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. மேலும் நம் நாட்டில் படித்து விட்டு அயல்நாட்டில் சென்று பணிபுரிவது நாட்டுபற்று மிக்க செயல் அல்ல. எனவே அனைவரும் நன்கு படித்து நம் நாட்டிலே சேவைபுரிய வேண்டும்' என்றார்.

மேலும் நமது தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை கற்பதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இளைஞர்கள் படித்துவிட்டு இந்தியாவிலேயே வேலை பார்க்க வேண்டும்...: நெல்லை கண்ணன் அட்வைஸ்

அதன் பின்னர் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழகம் நடத்திய மாநில அளவிலான, விளையாட்டுப் போட்டி மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டி மற்றும் தமிழ் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனை மாணவர்களுக்கு பரிசு கோப்பைகளும, பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அதேபோல், கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

இளைஞர்கள் படித்துவிட்டு இந்தியாவிலேயே வேலை பார்க்க வேண்டும்...: நெல்லை கண்ணன் அட்வைஸ்

உதவிபேராசிரியர்கள் எம்.முத்துராம் மற்றும் எம்.கோபிநாத் இவ்விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இறுதியாக கல்லூரியின் பயிற்சி மாணவி பிரதீபா ராணி நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் இனிதே நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

English summary
The annual day function of M.A.M College Of Education, Siruganur was held on 22nd April.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia