லக்னௌ பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படிக்கப் போறீங்களா....?

Posted By:

சென்னை: உத்தரப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற லக்னௌ பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

கலை, வணிகம், அறிவியல், கல்வி, ஃபைன் ஆர்ட்ஸ் உள்ளிட்ட துறைகளில் பிஎச்.டி படிப்பை இங்கு பயில முடியும்.

லக்னௌ பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படிக்கப் போறீங்களா....?

பட்ட மேல் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்ணைப் பெற்றவர்கள் இந்தப் படிப்பு விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 50 சதவீத மதிப்பெண்கள் போதுமானது.

பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பலாம். பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) விதிகளின்படி மாணவர்களின் சேர்க்கை நடைபெறும். செப்டம்பர் 24-க்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். மேலும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்-லைனில் செலுத்த கடைசி தேதி செப்டம்பர் 22 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.lkouniv.ac.in -ல் அறியலாம்.

English summary
University of Lucknow (LU), Lucknow has invited applications for admission to Doctor of Philosophy (Ph.D) programme. Admissions are offered in the faculty of Arts, Commerce, Science, Education and Fine Arts for the session 2015. Eligibility Criteria: Candidate should hold a post-graduate degree with minimum of 55% marks in Master's degree (For SC/ST and Physically Challenged/ Disabled candidates, qualifying marks shall be 50% at master's degree level in the subject concerned)

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia