9, 10ம் வகுப்பு பாடங்களில் ஏகப்பட்ட பிழைகள்!

Posted By:

சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்கிய 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் நிறைய பிழைகள் உள்ளன என்று ஆசிரியர்கள் கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து மேற்கண்ட பாடப்புத்தகங்களில் உள்ள பிழைகளை திருத்தும் பணிகளை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் மேற்கொண்டுள்ளது.

9, 10ம் வகுப்பு பாடங்களில் ஏகப்பட்ட பிழைகள்!

சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் என்னென்ன பிழைகள் உள்ளன என்பது குறித்து ஒரு பார்வை:

* ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் 27 என்று பட்டியல் போட்டுள்ளனர். ஆனால் உறுப்பு நாடுகள் மொத்தம் 28. பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பட்டியலில் இடம் பெற்றும் லைபீரியா ஒரு ஆப்ரிக்க நாடு. அதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் என்ன தொடர்பு. இது தவிர லாத்வியா, குரேஷியா ஆகிய இருநாடுகள் பட்டியலில் விடுபட்டுள்ளது.

* சமண மதத்தின் சின்னம் என்று ஒரு பாடத்தில் தர்ம சக்கரம் படம் அச்சிட்டுள்ளனர். இது சமணத்தின் சின்னமா என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஸ்வஸ்திகா, மூன்று புள்ளிகள், பிறை வடிவத்தின்மீது ஒரு புள்ளி ஆகியவை கொண்ட சின்னமே சமணத்தின் சின்னம் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

* வடுவூர் பறவைகள் புகலிடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தான் மேற்கண்ட வடுவூர் உள்ளது.

* பேக்ஸ், இன்புட், பாஸ்ட் பிரீடர் ரியாக்டர், மொபைல் டவர்ஸ், டிரான்ஸ்ஜெண்டர், ரிமோட் சென்சிங், மகத் மார்ச், போன்ற சொற்களுக்கு தவறாக மொழிப் பெயர்த்து அச்சிட்டுள்ளனர்.

மேலும் எலக்ட்ரிக் என்பதற்கும் எலக்ட்ரானிக் என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் மொழி பெயர்ப்பு செய்து அச்சிட்டுள்ளனர்.

தவிரவும் 9 மற்றும் 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள பாடங்கள் பெரும்பாலும் கருத்தியல் தெளிவில்லாமல் இருக்கின்றன. கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் நம்பகத் தன்மை இல்லை. வரலாற்று நிகழ்வுகளில் பல்வேறு திரிபுகள் காணப்படுகின்றன. பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

பெரியார், அண்ணா, திராவிட இயக்கம் போன்றவற்றில் பல குளறுபடியான விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மேற்கண்ட பிழைகள் குறித்து ஆய்வு செய்வும் ஒரு குழுவை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் நியமித்துள்ளது. கல்வியாளர்கள் சுட்டிக் காட்டிய பிழைகள் குறித்து குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

English summary
Teachers and educationsts are pointing out that there are lots of errors in Ninth STD and SSLC text books

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia