மாணவர்கள் கவனத்திற்கு!! ஒமைக்ரான் அச்சுறுத்தல்! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

ஒமைக்ரான் என்னும் புதிய நோய்த் தொற்றின் காரணமாக டிசம்பர் 15 ஆம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பெய்த கன மழையினால் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் கவனத்திற்கு!! ஒமைக்ரான் அச்சுறுத்தல்! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

இந்த நிலையில், ஒமைக்ரான் என்னும் புதிய நோய்த் தொற்றின் காரணமாக டிசம்பர் 15 ஆம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

திறக்கப்பட்ட பள்ளிகள்

திறக்கப்பட்ட பள்ளிகள்

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்பிற்குச் சென்று வருகின்றனர்.

மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு

மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு

இந்த நிலையில், மும்பையில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு இன்று முதல் பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்ட நிலையில், ஒமைக்ரான் என்னும் புதிய தொற்றின் காரணமாக டிசம்பர் 15 ஆம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் கொள்ளும் ஒமைக்ரான்

உயிர் கொள்ளும் ஒமைக்ரான்

உலக சுகாதார அமைப்பால் கடந்த 24ம் தேதியன்று கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் நோய்த் தொற்று இதுவரை கண்டறியப்பட்ட உயிர் கொள்ளும் வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை உள்ளதாகவும், தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று

இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது வரையில் யாரும் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், இந்நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு கட்டுப்பாடு

வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு கட்டுப்பாடு

பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், சீனா, பிரேசில், இஸ்ரேல், ஹாங்காங் போன்ற நாடுகள் ஒமைக்ரானால் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் அங்கிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஊரடங்கு

மீண்டும் ஊரடங்கு

மேலும், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளிகளை மூட உத்தரவு

பள்ளிகளை மூட உத்தரவு

அதன்படி, மும்பையில் கொரோனா ஊரடங்கு முடிந்து டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 15 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவச முகக் கவசம்

மாணவர்களுக்கு இலவச முகக் கவசம்

இதுகுறித்து மும்பை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ராஜூ தட்வி கூறுகையில், பள்ளிகளை வருகிற 15-ந் தேதி முதல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 7-ம் வகுப்பு வரை 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். மாநகராட்சித் தரப்பில் முககவசம், கிருமி நாசினி போன்றவற்றை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க தயார் செய்ய உள்ளோம்.

மாணவர்கள் கவனத்திற்கு

மாணவர்கள் கவனத்திற்கு

மேலும், பள்ளிகளைத் திறக்கும் முன் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற வேண்டும். பெற்றோர் ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும் என கட்டாயம் இல்லை. பெற்றோர்கள், மாணவர்கள் விரும்பினால் மட்டுமே பள்ளிக்கு வரலாம். விரும்பவில்லை என்றால் குழந்தைகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Lockdown: School Continue to Remain Shut in Mumbai due to Omicron Threat
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+