சிறுபான்மையின பெண்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி: மத்திய அரசு அளிக்கிறது

Posted By:

சென்னை: சிறுபான்மை பெண்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி என்ற சிறப்புப் பயிற்சியை மத்திய அரசு அளிக்கிறது.

இதற்கான விண்ணப்பங்களை சிறுபான்மையின பெண்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 சிறுபான்மையின பெண்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி: மத்திய அரசு அளிக்கிறது

மத்திய அரசின் சிறுபான்மை அமைச்சகத்தின் கீழ் "நயி ரோஷினி' எனும் திட்டம் செயல்படுகிறது. இதில், சிறுபான்மை மகளிரின் தலைமைப் பண்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

நடப்பாண்டில் (2015-16) விருப்பம் உள்ள அரசு, தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. 2012-13, 2013-14, 2014-15 ஆகிய ஆண்டுகளில் திட்டங்களைச் செயல்படுத்தியவர்களும் புதியதாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

விவரங்களை www.minorityaffairs.gov.in என்ற இணையதள முகவரியிலும், 1800 11 2001 என்ற இலவச எண்ணிலும் அறியலாம் என கூறப்பட்டுள்ளது.

English summary
Chennai district administration is conducting a coaching camp under The Scheme for Leadership Development of Minority Women 'Nai Roshni'. Aspirants can logon in to www.minorityaffairs.gov.in for more details.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia