வேளாண்மை பல்கலைகழகத்தில் செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 13 கவுன்சிலிங் நடைபெறும். இன்று வேளாண்மை கல்லுரிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28 முதல் 30 வரை நடைபெற்றது. இருப்பினும் காலியிடங்கள் குறையவில்லை ஆதலால் தொடர்ந்து செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 4 வரை கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டது ஆயினும் காலியிடங்கள் நிரம்பவில்லை.

தற்பொழுது 636 இடங்கள் காலியாக இருப்பாதால் இன்று முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவிருக்கிறது. இறுதிகட்ட கலந்தாய்வில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் 14 உறுப்பு மற்றும் 19 இணைப்பு கல்லுரிகள் வேளாண்மை, தோட்டக்கலை, இளநிலை, தொழில்நுட்பம், என 13 வகை படிப்புகள் வழங்கபடுகின்றன.
வேளாண்மை பல்கலைகழகத்தின் இறுதிகட்ட கலந்தாய்வில் பொதுபிரிவினர் பங்கேற்க அழைக்கப்பட்ட்டுள்ளது . காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கலந்தாய்வு நடைபெறும் . வேளாண்மை பல்கலைகழக இறுதிகட்ட கலந்தாய்வில் 184 கட் ஆஃப் மதிபெண்கள் பெற்றவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் .
வேளாண்மை பல்கலைகழகத்தின் இறுதிகட்ட கலந்தாய்வு நாளையுடன் முடிவடைகிறது . மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுக்கான இடத்தை உறுதி பெறலாம் . நீட்தேர்வு சிக்கலால் பல மாணவர்கள் மாற்றங்களை நோக்கி காத்திருப்பாதால் வேளாண்மை இறுதிகட்ட கலந்தாய்வுக்கு வரவில்லையோ என எண்ணம் தோன்ற செய்கிறது அல்லது இன்றும் நாளையும் மீதமுள்ள மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பார்கள் என்று நம்பபடுகிறது . விவசாய படிப்புகளுக்கு தற்போதைய காலகட்டங்களில் இணைவது அதிகரித்து வருகின்றது .
சார்ந்த படிப்புகள்:


Click it and Unblock the Notifications












