லால் பகதூர் மேலாண்மை அகாடமியில் படிக்க ஆசையா இருக்கா...!!

Posted By:

டெல்லி: புதுடெல்லியில் அமைந்துள்ள உயர்கல்வி நிறுவனமான லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை அகாடமியில் 15 மாத எக்ஸிகியூட்டிவ் முதுகலை டிப்ளமோ மேலாண்மை படிப்புக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த அகாடமியில் 2016-17 கல்வியாண்டில் பிசினஸ் அனலிட்டிக்ஸ், பேமிலி மேனேஜ்டு பிசினஸ் அன்ட் ஜெனரல் மேன்ஜ்மென்ட் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

லால் பகதூர் மேலாண்மை அகாடமியில் படிக்க ஆசையா இருக்கா...!!

இந்தப் படிப்பில் சேர இளங்கலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதோடு, 5 வருட பணிஅனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் படிப்புக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1950 ஆன்லைனில் செலுத்தலாம். தபால் மூலம் அனுப்ப ரூ.2,025 வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.

CAT/GMAT நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண், எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளமான http://www.lbsnaa.gov.in/ -ல் காணலாம்.

English summary
Lal bahadur sastri national academy of administration has invites applications from the students for the course of PG diploma in Administration. For more details students can logon into http://www.lbsnaa.gov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia