லட்சுமி விலாஸ் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு... ஆபிஸராக ரெடியா?

Posted By:

சென்னை : லட்சுமி விலாஸ் வங்கியில் உள்ள புரபேஷனரி ஆபிஸர் பணிக்கு நாடுமுழுவதும் உள்ள காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

லட்சுமி விலாஸ் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு... ஆபிஸராக ரெடியா?

வேலையின் தன்மை -

புரபேஷனரி ஆபிஸர்

கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

வேலை இடம் - இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி -

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை பயின்றிருக்க வேண்டும். அதில் 60% மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு -

20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை -

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு முறை - எழுத்துத் தேர்வு 90 நிமிடங்கள் நடைபெறும்.

எண்ணியல் திறன் -25 கேள்விகள், பகுப்பாய்வு திறன் -25 கேள்விகள், வாய்மொழி திறன்-30 கேள்விகள், வங்கி விழிப்புணர்வு-40 கேள்விகள்

கணினி / பொது அறிவு-30 கேள்விகள் ஆக மொத்த 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு தேர்வில் கேட்கப்படும்.

தேர்வு நடைபெறும் இடங்கள் -

தமிழ்நாடு - சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, கரூர்

கர்நாடகா - பெங்களூர், புது தில்லி - தில்லி, தெலுங்கானா - ஹைதெராபாத், ஆந்திரப் பிரதேசம் - விசாகப்பட்டினம், மகாராஷ்டிரா - மும்பை,

மேற்கு வங்காளம் - மேற்கு வங்காளம், ஜார்கண்ட் - ராஞ்சி, குஜராத் - அகமதாபாத், மத்தியப் பிரதேசம் - போபால்

மேற்கண்ட இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக்கட்டணம் - ரூ. 650/- அனைத்து விண்ணப்பதாரர்களிடமும் வசூலிக்கப்படுகிறது.

முக்கிய தேதிகள் -

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் - மார்ச் 29 முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நுழைவுச்சீட்டு - தேர்வு நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்பு ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நடைபெறும் நாள் - மே மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

English summary
Lakshmi Vilas Bank Recruitment 2017 scheduled to hire the post of PO-Probationary officers for their branches across the country.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia